Uncategorized

விண்வெளி ஆராய்ச்சி சாதனையாளர் ஹெரோல்ட் கிளேட்டன் யுரே!

விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டியவர்களில் மிக முக்கியமானவர் ஹெரோல்ட் கிளேட்டன் யுரே ஆவார்.

இவர் புகழ்பெற்ற அமெரிக்க ரசாயன விஞ்ஞானியாகத் திகழ்ந்ததோடு, ஞாயிற்றுத்தொகுதி பற்றிய அரிய பல கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் இன்டியானா மாநிலத் தில் உள்ள வோர்க் கர்டன் எனும் இடத் தில் பிறந்த இவர், இளமையில் கல்வி கற்பதில் பெரிதும் நாட் டம் கொண்டார். 1917 இல் மிசௌலாவிலுள்ள மோண்டானா மாநில பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டத்தையும் பெற்றார்.

1923 முதல் 1924 வரை டென்மார்க்கிலுள்ள கொபன்ஹேகனில் நீல்ஸ்போர் என்பவருடன் இணைந்து பணிபுரிந்தார். நீல்ஸ்போர் என்பவர் பெளதீக விஞ்ஞானத் துறையில் மிகச் சிறந்த வல்லுனராவர்.

இவரே அணு உருவக் கோட்பாட்டை விரிவுபடுத்தியவர். இவரின் அணு உருவக் கோட்பாட்டு ஆராய்ச்சிக்கு கிளேட்டன் யுரே அவர்கள் பேருதவி புரிந்தார்.

பின் ஐக்கிய அமெரிக் காவின் பால்டிமோர் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலும், நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கும் பணியை மேற்கொண்டார்.

அவர் முதலில் அணுவியல் கல்விக்காக, சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலும்,பின்னர் சென்டெய்கோ கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.

1920 இல் திரவ ஐதரசனை வடிகட்டும்போது, அவருடைய முதல் ஆராய்ச்சி தொடங்கியது. 1932 இல் கனமான நீர் தனித்திருத்தல் மற்றும் ட்யூடேரியம் கண்டுபிடித்தலில் வெற்றி பெற்றார். இதற்காக, கிளேட்டன் யுரே அவர்கள் 1934 இல் ‘நொபெல் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

சந்திரன் மற்றும் கிரகங்களின் அமைப்புக் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் பணிகளும் விண்வெளி யுகம், ஞாயிற்றுத் தொகுதி ஆய்வுக்கு அத்திவாரமிட்டது.

புவியிலிருந்து நிலவு தனி உற்பத்தித்தானம் வைத்துள்ளதையும் புவியின் பிறப்பு மற்றும் உற்பத்தித்தான கோட்பாடுகளையும் வெளிப் படுத்தினார். 1952 இல் The Planets Their Orgin and Developments என்ற ஆய்வு நூலையும் இவர் வெளியிட்டார்.

1960 இல் விண்வெளி ஆய்வை ஆதரித்து சிபாரிசு செய்தார். ஞாயிற்றுத் தொகுதியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் தானம் போன்றவற்றை உறுதி செய்ததன் மூலம் பிறகோள்களில் உயிர் வாழ வாய்ப்பிருக்கிறதா? எனும் வினாவுக்கு விடை கான முனைந்தார்.

அந்தவகையில், பல்வேறு சாதனைகளைப் புரிந்த கிளேட்டன் யுரே அவர்கள் 1981 ஜனவரி 5 ஆம் திகதி கலிஃபோர்னியாவில் உள்ள லோஜோஸ்லாவில் மரணமடைந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.