இலங்கைபொது அறிவு

இலங்கை கூட்டுறவு சங்க வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்!

இலங்கை கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதன் வளர்ச்சி குறித்த வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்!

இலங்கையின் முதலாவது கூட்டுறவு அம்சங்கள் பொருத்திய ஓர் அமைப்பு 1906ம் ஆண்டு தம்பறையில் தெல்தெனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

கடன் உதவு சங்கங்கள் அமைப்பதற்கு 1911ம் ஆண்டு கூட்டுறவுக் கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது.

முதலாவது கடன் உதவு சங்கம் 1912ம் ஆண்டு வெல்லபடபத்து என்னும் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டது.

1913ம் ஆண்டு விவசாய இலாகாவின் பணிப்பாளர் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்யும் பதிவாளராக நியமனம் பெற்றார்.

1913ல் இலங்கையின் முதலாவது கூட்டுறவுச் சங்கம் மாத்தறை வெல்லபடபத்து கடன் உதவு சங்கம் எனப் பெயரிடப்பட்டது.

உள்ளூர் கடனும் அபிவிருத்தி நிதியும் உருவாக்கல் பற்றிய 1916ம் ஆண்டு 220 இலக்க கூட்டுறவுக் கட்டளைச் சட்டம் 1916ல் இயற்றப்பட்டது.

1920ல் முதன் முதலாக கூட்டுறவுப் பரிசோதகர் நியமனம் வழங்கப்பட்டு அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.)

கடனுதவு சங்கங்கள் மட்டமல்லாது ஏனைய வகைச் சங்கங்களும் மேல் நிலைச் சங்கங்களும்பதிவு செய்ய ஏற்ற வகையில் கூட்டுறவுக் கடனுதவுக் கட்டளைச் சட்டம் 1921ல் திருத்தி அமைக்கப்பட்டது.

முதலாவது பதிவு செய்யப்பட்ட மேல்நிலைச் சங்கம் 1924ல் கொழும்பில் கூட்டுறவு மாகாண சமாசம் எனப் பெயரிடப்பட்டது.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளரான டபிள்யு.கே.எச். கெம்பல் 1926ல் பதவி ஏற்றார்.

1927ல் முதலாவது கூட்டுறவுப் பண்டகசாலைச் சங்கம் தோட்டத் தொழிளாளர் இடையே பசறைத் தோட்டத்தில் ஆரம்பித்துப் பதிவு செய்யப்பட்டது.

இதே ஆண்டில் இலங்கையின் முதலாவது பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் யாழ்ப்பாணம் அளவெட்டியில் உள்ள அருநோதயாக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் முதலாவது உச்சநிலைச் சங்கமாக கொழும்பு மாவட்டக் கூட்டுறவுச் சமாசம் முதலாவது கூட்டுறவு மாகாண வங்கி யாழ்ப்பாணத்தில் 1929ல் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களைப் பரிசோதனை செய்வதற்காக கௌரவ கூட்டுறவுப் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

1930ல் விவசாய இலாகாவில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக கூட்டுறவு இலாகா ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் முதலாவது பால் உற்பத்தியாளர் சங்கம் பொமிலியா என்னும் இடத்தில் 1931ல் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் முதலாவது படகு உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம் 1933ல் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மலையாளப் புகையிலை விற்பனவுச் சங்கம் யாழ்ப்பாணத்தில் 1934ம் ஆண்டு அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

திரு. டபிள்யு. கே.எச்.கெம்பல் 1935ம் ஆண்டு பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு திரு.எச.கல்வேட் அவர்கள் ஒரு வருடத்திற்குப் பதிவாளராக நியமனம் பெற்றார்.

1936ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் கட்டளைச் சட்டங்களை ஒன்றினைப்பதற்கான திருத்தம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

வட மாகாணகூட்டுறவு மேற்பார்வைச் சங்கம் 1937ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு அதே ஆண்டில் நிருவாகக் கணக்குப் பரிசோதனை நிதி ஒன்று உருவாக்கப்பட்டது.

1942ல் இரண்டாவது மகாயுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருள் தட்டுப்பாட்டின் காரணமாகக் கிடைக்கும் பொருட்களை எல்லா மக்களுக்கும் இலகுவாகக் கிடைக்கச் செய்யும் பொருட்டு அரசு கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைக்கும் பிரசார இயக்கத்தை மேற்கொண்டு பல கூட்டுறவுப் பண்டகசாலைகள் பதிவு செய்யப்பட்டது.
இதே ஆண்டில் தென்னை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே ஆண்டில் வட பகுதி விவசாய விளை பொருள் உற்பத்தி விற்பனையாளர் சமாசம் ஆரம்பித்துப் பதிவு செய்யப்பட்டது.

1943ல் கூட்டுறவுக் கல்லூரி பொல்கொல்லையில் ஆரம்பிக்கப்பட்டது.

1952ல் இலங்கை மீன் விற்பனைச் சங்கம் உருவாக்கப்பட்டுது.

1947ல் விவசாய விளை பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களை உருவாக்கும் முயற்சியிலீடுபட்டு இச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டில் கூட்டுறவு அலுவலகங்களுக்கான அமைச்சு உருவாக்கப்பட்டு இதன் அமைச்சராகக் கௌரவ ஏ.ரத்நாயக்க
அவர்கள் நியமிக்கப்பட்டார்.

1949ல் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களமும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திணைக்களமும் ஒன்றினைக்கப்பட்டது.
அதே ஆண்டில் கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனம் கூட்டுத்தாபன அமைப்பு முறைக்கு மாற்றியமைக்கப்பட்டது. மேலும் இதே ஆண்டில் கூட்டுறவுச் சமஷ்டி வங்கியொன்று உருவாக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது.

1949ல் 21ம் இலக்க கூட்டுறவுச் சங்கங்களின் திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது.

கூட்டுறவுச்சங்கப் பிரதி நிதிகள் 6000 பேர் கலந்து கொண்ட அகில இலங்கை மகாநாடு 1950ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது.

1952ல் இலங்கை மீன் விற்பனைச் சங்கம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டில் யாழ்ப்பாணக் கூட்டுறவுக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் இதே ஆண்டில் 17ம் இலக்க கூட்டுறவுச் சங்கங்களின்
விசேட ஏற்பாடுகள் சட்டம் கொண்டுவரப்பட்டது

1953ல் பெண்களும் கூட்டுறவப் பரிசோதகர் பதவிக்கு அமர்த்தப்பட்டனர்.

* சிறிய அளவிலான தேயிலைத் தோட்ட உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம் 1954ல் காலியிலுள்ள ஹங்கட்டத்துவையில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கைக் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் 1955ல் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டில் இலங்கையின் முதலாவது கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை மொறகொல்லையில்
ஆரம்பிக்கப்பட்டது.

1956ல் கூட்டுறவுத் திணைக்களத்தில் வெளிப்புறக் கல்வி விஸ்தரிப்புப் பகுதி நிறுவப்பட்டது.

பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கும் முயற்சி 1957ல் பதிவு செய்யப்பட்டது.

மக்கள் வங்கி 1961ல் உருவாக்கப்பட்டது.

இலங்கை விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் 1962ல் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இலங்கை கூட்டுறவுக் கைத் தொழில் சங்கமொன்று 1964ல் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இலங்கையில் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கமொன்று 1966ல் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இலங்கையின் இறப்பர் சம்மேளனம் 1967ல் ஆரம்பிக்கப்பட்டது.

1968ல் இலங்கையின் கூட்டுறவு இயக்கம் சம்மந்தமான விடயங்களை ஆராய்வதற்காக லெயிட்லோதலைமையிலான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

1969ல் இலங்கையின் முதலாவது மரண சகாய கூட்டுறவுச் சங்கம் காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான 35ஆம் இலக்க திருத்தச் சட்டம் 1970ல் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டில் வெயிட்லோ ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்களின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டமை.

தேசிய வீடமைப்பு அபிவிருத்திச் சங்கமொன்று 1971ல் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

1972ல் இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனம் புணரமைக்கப்பட்டு ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபை உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டமை.
அதே ஆண்டில் கூட்டுறவுச் சேவையாளர் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான 5ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் இதற்கு முன்னிருந்த திருத்தச் சட்ட மூலங்கள் பல உள்ளடக்கப்பட்டும்
அகற்றப்பட்டும் முழுமையான சட்ட வடிவமாக அமைந்தது.

1973ல் கூட்டுறவு முகாமை சேவை நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டது.

1976ல் கூட்டுறவு வியாபார நிலையங்களை நவீன மயப்படுத்தி ஊக்குவிக்கப்பட்டது.
அதே ஆண்டில் கொடுப்பனவு முறை கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

கூட்டுறவு முயற்சி பற்றி ஆராய்ந்து சிபாரிசு செய்வதற்காக கூட்டுறவுப் புணரமைப்புக் குழு (தேவநாயகம் குழு) 1978ல் நியமிக்கப்பட்டது. அதே ஆண்டில் உணவுப் பங்கீட்டுப் புத்தக முறை ஒழிக்கப்பட்டு உணவு முத்திரைத் திட்டம் அமுலாக்கப்பட்டு உணவு முத்திரைகளுக்குப் பொருள் வழங்கும் நிறுவனமாகப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நியமிக்கப்பட்டது.

1983ல் 32ஆம் இலக்க கூட்டுறவுத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டில் 37ம் இலக்க சட்டத்தின் படி கூட்டுறவு முகாமைச் சேவை நிலையம் இலங்கை கூட்டுறவு முகாமை நிறுவனம் என உருவாக்கப்பட்டது.

1991ல் அதாவது 1991.05.06ல் 40000 கூட்டுறவு ஊழியர்கள் அடங்கிய ஜனாதிபதி கலந்து கொண்ட மகாநாடு ஒன்று நடைபெற்றது. இதே ஆண்டில் 11ம் இலக்கத்திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது. மேலும் இதே ஆண்டில் ஜனசவியத் திட்டத்தின் கீழ் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1994ல் அதாவது 1994.04.26ல் 3ஆவது ஆசிய பசபிக் நாடுகளின் கூட்டுறவு ஒன்றியத்தின் மாகாநாடு இடம்பெற்றது.

சமுர்த்தித் திட்டத்தின் மூலம் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டம் 1995ல் ஆரம்பிக்கப்பட்டது.

 

/* இலங்கை அரசினால் நடாத்தப்படும் அனைத்து போட்டி பரீட்சைகளுக்குமான பொது அறிவு தொகுப்பு! */

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.