இலங்கைபொது அறிவு

இலங்கையின் சட்டங்கள் பாகம் 2

குடும்பச் சட்டம் தீர்க்கும் முறைமைக்கு ஏற்பாடு செய்யும் பிணக்குகள் – தனிப்பட்ட பிணக்குகள், குடும்ப பிணக்குகள், தனியாள் பிணக்குகள்

சட்ட மூலத்திற்குத் திருத்தங்களைச் செய்தல் அல்லது புதிய வாசகங்களைச் சேர்த்தல் நடைபெறுவது குழு நிலையின் போது

பெரும்பாலான சட்டங்கள் சட்டமாவதுசபாநாயகரின் சான்றிதழுடன்

இலங்கையின் நியதிச்சட்டத்தினால் அணுகப்படாத சட்டத்தின் ஒரு விடயம் – தீங்கு

வீதிப்போக்குவரத்து விபத்துடன் சம்பந்தப்பட்ட கவனயீனமான சாரதி எந்தச் சட்டத்திற்கு உறுதிப்படுத்தப்படும் சட்டம் – தீங்கியற் சட்டம்

பிள்ளைகள் தமது பெற்றோர்களைப் பராமரிக்கும் கடப்பாடுடையவர் என்பது அங்கீகரிக்கப்பட்டிருப்பது – பராமரிப்புச் சட்டத்தில்

இலங்கையில் பெரும்பாலான குற்றவியல் தவறுகள் அடக்கப்பட்டுள்ளதுதண்டனைச் சட்டக் கோவையில்

சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுவதன் காரணங்கள்
 • அரசாங்கம் நிறைவேற்றவிருக்கும்சட்டத்தைப்பற்றி பொதுமக்கள் எல்லோரும் அறிந்திருப்பதற்காக,
 • பொதுமக்கள் தமது அபிப்பிராயங்களையும், முன்மொழியப்படும் சட்டத்தின் விரும்பத்தகாத நிலைகள் பற்றிய மாற்றங்களையும் பிரேரிப்பதற்கு

ஒர் அரசுக்கும் அதன் பிரசைகளுக்குமிடையே உள்ள தொடர்பை ஆளுவது அரசின் – அரசியலமைப்பு

கிரிக்கெட் விதிகள் சட்ட விதிகளிலிருந்து வேறுபடுவது – கிரிக்கெட் விதிகளினால் எல்லோரும் கட்டுப்படமாட்டார்கள், ஆளமாட்டார்கள். கிரிக்கெட் விளையாட்டை
தெரிவு செய்பவர்கள் மட்டுமே கட்டுப்படுவார்கள். கிரிக்கெட் விதிகளை
மாற்றவும் முடியும்

குற்றவியல் சட்டத்தின் குறிக்கோள்

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுத்தல்

தனியார் சட்டம் என்பது தனிநபர்களுக்கிடையிலான உறவு முறைகளை நிர்வகிக்கின்ற சட்டம்

தீர்ப்புச் சட்டம் சட்டக்கோட்பாடு அல்லது நிலைப்பாடு மீது உயர்நிலை நீதிமன்றங்களின் சட்டவலுக் கொண்ட முடிபுகள்

சட்ட உதவித்திட்டத்தின் நோக்கம் வறிய வழக்காளிகளுக்கு சட்ட மதியுரை வழங்குவதும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த வழக்கறிஞரை ஒழுங்கு செய்வதும்.

சட்டச் சூழல் – சமூகத்திலுள்ள சட்டம்

சூழல் காப்புடன் தொடர்பான கட்டளைச் சட்டங்கள்
 • தேசிய சுற்றாடல் சட்டம் 1980
 • சூழல்காப்பின் பொருட்டு அடிப்படைச்
  சட்டக ஏற்பாடுகளை அடக்கிய சட்டம் இதுவாகும். மத்திய சுற்றாடல்
  அதிகார சபை நிறுவப்பட்டமை, கழிவுப்
  பொருட்களை வெளியேற்றுவதன் பொருட்டு சூழற்பாதுகாப்பு அனுமதிப்
  பத்திரத்தினது
  அறிமுகம் என்பன இச்சட்டம் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.
 • 1984 – ஓசோன் படையை பாதிக்கும் பதார்த்தங்களை 01.01.2000 முதல் தடை செய்வதற்கான கட்டளைகளும் வரைவேடுகளும்
  • உதாரணம் :- CFC (CFCI3), ஹெலோன் CP3Br
 • 1996 சத்தத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தேசிய சுற்றாடல் சட்டம்,
  உதாரணமாக, பாடசாலை ஒன்றிலிருந்து 1000 வரையான பிரதேசம் அமைதி வலயமாகும்.
  ஒலியின் இழிவான அதிர்வெண்
  50 டெசிபல்
 • 2000 – வாயுக்களை வெளியேற்றும் எரிபொருட்கள்
  மற்றும் வாகனங்களினது இறக்குமதி வரையறை தொடர்பான
  தேசிய சுற்றாடல்
  சட்டம். உதாரணமாக பெற்றோலில் இயங்கும் மோட்டார் வண்டி ஒன்று இயந்திரத்தை இயக்கி
  நகராத நிலையில் வெளிப்படக் கூடிய காபனீ ரொட்சைட்டின் அளவு 6% இற்கு குறைவாகக் காணப்பட வேண்டும்.
 • 2004 – தேசிய சுற்றாடல் சட்ட கட்டளைகளுக்கு
  இணங்க முத்து ராஜவல சூழல் பாதுகாக்கப்பட்ட வலயமாக
  பிரகடனப்படுத்தப்பட்டமை
 • 2006 தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் 201 அல்லது அதிலும் குறைந்த பொலித்தீன் உற்பத்தி பயன்பாடு விற்பனை என்பன தடை செய்யப்பட்டமை.
சர்வதேச சமவாயங்கள்

1972 சுவிடன் தேசத்தில் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் செயற்திட்டம் ஆரம்பித்தமை. இதன் பிரதான நோக்கமாக உலகில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரதான குழற் பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை அமைந்தது.

 • வியன்னாச் சமவாயம்1982 இல் ஒஸ்ரியாவின் வியன்னா நகரில் ஓசோன் படையினது காப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சமவாயம்.
 • மொன்றியல் வரைவேடு – 1984 இல் கனடாவின் மொன்றியல்
  நகரத்தில்
  CFC பயன்பாட்டை இழிவாக்கும் வகையில் மேற் கொள்ளப்பட்டது.
 • பொன் சமவாயம் – ஜேர்மனியின் பொன் நகரத்தில் மேற் கொள்ளப் பட்ட குடிபெயரும் விலங்குகளினது சமவாயம்.
 • கொயோட்டோ வரைவோடு ஐப்பானினது கொயோட்டோ நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட பச்சைவீட்டு வாயுக்களினது வெளிப்படுத்து கையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வரைவோடு
 • CITES சமவாயம் – அரிய தாவர, விலங்குகளினது வாணிபம் தொடர்பான சமவாயம்.

அடிப்படை மனித உரிமைகளை மீறுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு வழக்குத் தாக்கல் மனு சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால எல்லை – ஒரு மாதம்

இழைக்கப்பட்ட அத்துமீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால எல்லை – 06 மாதங்கள்

ஆட்கொணர்கை விண்ணப்பம் பொருந்துவது – பொலிஸ் கட்டுக்காப்பில் உள்ளவர்.

1948 டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தால்
பாதுகாக்கப்படுவது

 • சட்டத்திற்கு முன்னால் சமத்துவம்
 • சிந்தனை மனச்சாட்சி, சமயம் என்பன பற்றிய சுதந்திரம்
 • தொழிற்சங்கங்களில் சேர்வதற்கான உரிமை
 • சொந்த ஆதனத்தை வைத்திருப்பதற்கான உரிமை

உலக மக்களிடையே புரட்சிகர அரசியல் கருத்துவாதத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்த நூல் – தாஸ் கபிட்டல் (Das Kapital)

மரண சாதனங்கள் மற்றும் அட்டோனி தத்துவம் தொடர்பான ஆவணங்களை பொறுப்பெடுப்பதற்கு அதிகாரம் கொண்ட அரசாங்க திணைக்களம் – பொது திணைக்களம்

சமாதான அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்தும் ஆசிய நாடு  ஜப்பான்

தெற்காசிய நாடுகளிடையே மிகவும் நீண்ட அரசியலமைப்பை கொண்ட நாடு – இந்தியா

தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்திலே உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் – பேச்சு சுதந்திரம் (கூட்டம் கூடும் சுதந்திரம்),  விரும்பும் இடத்தில் வாழும் சுதந்திரம்

அரச அலுவலர் ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படக்கூடிய சந்தர்ப்பங்கள்

 • நீதிக்குப் புறம்பாக பதவியுயர்வு வழங்காமை, இடமாற்றம் செய்தல்
 • சம்பளம் ஏற்றம் நிறுத்துகை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.